Advertisment

போக்ஸோவில் கைதான வாலிபர்; தீர்ப்பை அறிவித்த சிறப்பு நீதிமன்றம்! 

Youth arrested in POCSO; Special court announces verdict!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள வாண்டையார் இருப்பு புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் சுபாஷ்(23). கூலித் தொழிலாளியான இவர் இவரது உறவுக்கார 16 வயது சிறுமியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இந்த நெருக்கத்தின் காரணமாக சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி தனிமையிலும் இருந்துள்ளார். அதையடுத்து சிறுமி தன்னை திருமணம் செய்ய வேண்டுமென சுபாஷிடம் கேட்டபோது மறுத்துள்ளார். இதனிடையே சிறுமி கர்ப்பம் ஆனார். அதனைத் தொடர்ந்து சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் போக்ஸோ சட்டத்தின்கீழ் சுபாஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisment

அதேசமயம் சிறுமிக்கு கடந்த 6.6.2020 அன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. சிறுமியை தாயாக்கிய நிலையிலும் சுபாஷ் திருமணம் செய்ய மறுத்து வந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடலூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.

Advertisment

நேற்று இறுதி கட்ட விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். சிறுமியை தாயாக்கி திருமணம் செய்ய மறுத்த நிலையில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட கூலித்தொழிலாளி சுபாஷுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி எழிலரசி தீர்ப்பளித்தார்.

POCSO ACT Cuddalore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe