youth arrested POCSO Act Cuddalore

Advertisment

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ளம.புடையூர் கிராமத்தைச் சேர்ந்த கிச்சான் என்பவரது மகன் செந்தில்(27). இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வெண்ணிலா என்ற பெண்ணுடன் ஏற்கனவே திருமணமாகிஇரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் அவரது ஊர் அருகே உள்ள ஆவட்டி கைகாட்டியில் உள்ள ஓட்டலில் திண்டுக்கல் மாவட்டம் மேலத்தின்பட்டியைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் வேலை பார்த்து வந்திருக்கிறார். ஹோட்டலுக்கு சாப்பிடச் செல்லும்போது அந்தப் பெண்ணுக்கும், செந்திலுக்கும் ஏற்பட்ட அறிமுகம் திருமணத்தை மீறிய உறவாக வளர்ந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு செந்தில் தனது பெண் தோழியை பெரங்கியும் என்ற கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தங்க வைத்துள்ளார். அங்கு செந்தில் அடிக்கடி சென்று அவருடன் பழகி வந்துள்ளார். அந்த பெண் தோழிக்கு 18 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகன் சென்னையில் வேலை செய்ய, மகள் மட்டும் தாயுடன் வசித்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில் பெண் தோழியின் வீட்டிற்கு அடிக்கடிவந்து செல்லும் செந்தில், “பெண் தோழியின் மகளிடம் நான் உன்னை விரும்புகிறேன், என்னுடன் நீ நெருங்கி பழக்க வேண்டும்”என வற்புறுத்தியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி, உடனேஇது குறித்து தனதுதாயிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு செய்வதறியாமல் தவித்து வந்த சிறுமியின் தாயை, செந்தில் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று “உனது மகளை நான் விரும்புகிறேன்.அவள் என்னோடு நெருங்கி பழக நீ அவளை வற்புறுத்த வேண்டும்.அவளை நான் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளேன்”என்று மிரட்டியுள்ளார். தொடர்ந்து சிறுமிக்கு செந்தில் பாலியல் தொல்லை கொடுக்க, அதைதாங்க முடியாத அவர் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு காவலரின் தொடர்பு எண்ணுக்கு போன் செய்து தனக்கு நடந்த கொடுமைகளை கூறியுள்ளார்.

இதைக் கேட்ட போலீசார் உடனே திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமிக்கு தகவல் அளித்துள்ளனர். அவர் உடனடியாக சக பெண் போலீசார் உடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று அந்த சிறுமியைமீட்டதோடு அக்கம்பக்கத்தினர்களிடம் விசாரணை நடத்தி சம்பவம் உண்மை என்பதை கண்டறிந்து, செந்தில் மீது போக்சோ சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.