
திருச்சி பொன்மலை பகுதியைச்சேர்ந்தவர் ரயில்வே துறை ஊழியர் புருஷோத்தமன்(27). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரைத்தினமும் பள்ளிக்குச் செல்லும் பொழுது வழிமறித்து என்னுடன் செல்போனில் பேச மாட்டாயா? என்னை கட்டிக்கிறியா? என்று கூறி கிண்டல் செய்துள்ளார்.
இதுகுறித்து பெற்றோரிடம் மாணவி கூறியுள்ளார். அதன் பின்னர் அவரது பெற்றோர் பொன்மலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்திய மகளிர் போலீசார், போக்சோவின் கீழ் வழக்குப்பதிவு செய்து புருஷோத்தமனைக் கைது செய்தனர். மேலும் அவரின் நண்பர்களான ராம் உள்பட 3 பேரைத்தேடி வருகின்றனர்.
Follow Us