அதிகாலையில் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்; இளம்பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்!

Youth arrested for misbehaving with sleeping woman in Cuddalore

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது விடுமுறை காரணமாகத் தனது பாட்டில் வீட்டில் தங்கியிருக்கிறார். பாட்டில் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் ஓட்டுநரான ரவிராஜ் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை அந்த இளம்பெண்ணின் பாட்டி இயற்கை உபாதை கழிக்க வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார் . இளம்பெண் மட்டும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார் .

இந்த நிலையில் பாட்டியின் வீட்டிற்குள் புகுந்த ரவிராஜ் , தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் நடந்த சம்பவத்தை வெளியே கூறினால், கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறார். அந்த நேரம் பார்த்து திடீரென வெளியே சென்ற பாட்டி வீட்டிற்குள் வர, அவரை கண்ட ரவிராஜ் பாட்டியை கீழே தள்ளிவிட்டு, அங்கிருந்து தப்பித்துச் சென்றிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இளம்பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த குமராட்சி போலீசார் ரவிராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Cuddalore police woman
இதையும் படியுங்கள்
Subscribe