கோவை குனியமுத்தூர் அடுத்த மைல்கல் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம். கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன் தினம் இடையர்பாளையம் அருகே உள்ள மதுக்கடையில் மது குடித்து விட்டு வெளியே வரும்போது , இவரது வீட்டின் அருகே குடியிருக்கும் தர்வேஸ் மைதீன் என்ற வாலிபருடன் பேசி கொண்டிருந்ததாக தெரிகிறது.
அப்போது இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த தர்வேஸ் மைதீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அப்துல் ஹக்கிமை குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கிருந்து தப்பிய தர்வேஸ் மைதீனை குனியமுத்தூர் போலிசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.