Advertisment

பள்ளி மாணவியை கடத்தி கட்டாயத் திருமணம்; வாலிபர் போக்சோவில் கைது!

Youth arrested for kidnapping school girl and forcing her into marriage

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேபத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவியை கடத்திச் சென்றுகட்டாயத் திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர்போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள வடுகாசம்பட்டியைச் சேர்ந்த 15 வயது மாணவிஅப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த பிப்ரவரிமாதம் 22ம் தேதிபள்ளிக்குச் சென்ற சிறுமிமீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமிகிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர்இதுகுறித்து ஊத்தங்கரை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

Advertisment

புகாரில்,ஆலந்தூர்அருகே உள்ள செங்கம்பட்டியைச் சேர்ந்த பொக்லைன் இயந்திர இயக்குநராக வேலை செய்து வரும் சதீஷ் (24) என்பவர்தங்கள் மகளைக் கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டதாகக் கூறியிருந்தனர். அதன் பேரில்விசாரணை நடத்திய காவல்துறையினர்சதீஷ்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவரிடம் இருந்துசிறுமியை மீட்டுமருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

POCSO
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe