Youth arrested for having satellite phone

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் ஃபோன் வைத்திருந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

ராமநாதபுரம் பாம்பன் தெற்கு பகுதியில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் ஃபோன் சிக்னல் கிடைத்ததாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி ஜான் பவுல் என்ற இளைஞரை பிடித்துவிசாரித்தனர். மேலும் அவரிடம் இருந்து தடை செய்யப்பட்டசாட்டிலைட் ஃபோன், இலங்கை ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது.

Advertisment

இதுகுறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அது இலங்கை கொழும்புவை சேர்ந்த சுனிமல் என்ற தேடப்படும் குற்றவாளியின்சாட்டிலைட் ஃபோன் என்பது தெரியவந்தது. சாட்டிலைட் ஃபோனுடன் சட்டவிரோதமாக தமிழகத்தில் நுழைந்திருக்கலாம் என்றகோணத்தில் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட சாட்டிலைட் ஃபோனை வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.