Advertisment

சிறுமியிடம் பழகுவதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் கைது! - சிவகாசி கொடுமை!

Youth arrested in girl child case

Advertisment

கோவில்பட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுமியைக் காதலித்து சிவகாசிக்கு அழைத்துவந்த கணேஷ்மணி, அவளை கவிதா நகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கவைத்து, தவறான வழியில் பயன்படுத்தியிருக்கிறான்.

அரிவாளால் வெட்டப்பட்டு, தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெறும் ஓய்வுபெற்ற ராணுவவீரர் வைரக்காளை, சிவகாசி டவுண் காவல்நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து, கவிதா நகர் வீட்டில் கணேஷ்மணி என்னென்ன காரியங்களைச் செய்துவந்திருக்கிறான் என்பது அம்பலமாகியிருக்கிறது.

தனக்குத் தெரிந்த நண்பர் வட்டத்தை செல்போனில் தொடர்புகொண்டு வீட்டுக்கு அழைப்பதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறான் கணேஷ்மணி. சிறுமியை அவர்களுடன் பழகவிட்டிருக்கிறான். அழைப்பின் பேரில் வீட்டுக்கு வரும் வசதி உள்ளவர்களிடம், சிறுமியுடன் பழகுவதை வீடியோ எடுத்து, அதைக்காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளான்.

Advertisment

ராணுவவீரர் வைரக்காளையும் அந்த வீட்டுக்குப் போய் மாட்டிக்கொண்டு, மிரட்டலுக்கு ஆளானவர்தான். அங்கிருந்த கும்பல் பணம் கேட்டதில் தகராறாகி, அரிவாளால் வெட்டப்பட்டிருக்கிறார்.

பாதிக்கப்பட்ட ஆண்கள் மானத்துக்குப் பயந்து புகாரளிக்க முன்வராத நிலையில், வீடியோ மிரட்டலுக்கு உரிய ஆதாரம் காவல்துறையினருக்கு கிடைக்கவில்லையாம். அதனால், கணேஷ்மணி, வைரமுத்து, செந்தில்குமார், சுடலைகுமார் ஆகியோர் மீது 397-ன் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறது சிவகாசி டவுண் காவல்நிலையம்.

மூவர் தப்பிவிட்ட நிலையில், கணேஷ்மணி மட்டும் கைதாகியிருக்கிறான். சிறுமியை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

police Sivakasi
இதையும் படியுங்கள்
Subscribe