Advertisment

சாரை பாம்பைச் சமைத்துச் சாப்பிட்ட சம்பவம்; வைரல் வீடியோவால் வசமாக சிக்கிய இளைஞர்

Youth arrested for eating snake juice

Advertisment

திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் ராஜேஷ்குமார் (30). இவர் நேற்று சமூக வலைதளங்களில் சாரை பாம்பை தோல் உரிப்பது போல் வீடியோ ஒன்றை பதிவு செய்தார்.

இதனை ஆதாரமாகக் கொண்டு திருப்பத்தூர் கோட்ட மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் உத்தரவின் படி திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோழராஜன் தலைமையில் வனவர் மற்றும் வனப் பணியாளர்கள் இந்த வீடியோ வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெருமாபட்டு கிராமத்திற்குச்சென்று ராஜ்குமாரை கைது செய்து அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சாரை பாம்பை தோல் உரித்து அதனை சமைத்து கறியாக்கி சாப்பிட்டதை ஒப்புக்கொண்டார். எதற்காக இப்படி செய்தாய்எனக்கேட்ட அதிகாரிகளிடம், அப்படி சாப்பிட்டால் உடல் பலம் பெருகும், ஆண்மை அதிகரிக்கும்னு சொன்னாங்க. அதான் பாம்பை தேடிப்பிடிச்சி அடிச்சி சாப்பிட்டேன் என்றதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

snake
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe