Youth arrested for  cousin woman case

திருச்சி மாநகரம் டி.வி.எஸ் டோல்கேட் விவோ நகர் பகுதியில் வசித்து வருபவர் மாலதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வந்த நிலையில் தற்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் கடந்த 5 வருடத்திற்கு முன்பு உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வந்த இவருக்கும், இரயில்வேயில் பணியாற்றும் இவரது உறவினரான லால்குடி தொகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

கடந்த இரண்டு வருட காலமான இவர்களின் பழக்கத்தில், ஸ்டாலின் பலமுறை மாலதியைபாலியல் வன்கொடுமைசெய்துள்ளார். இதில், மாலதியின்அந்தரங்க புகைப்படங்களை எடுத்து வைத்துக்கொண்டு ஸ்டாலின் அவரை மிரட்டி ரூ. 20 ஆயிரம் பணம் பறித்துள்ளார். மேலும், தொடர்ந்து ஸ்டாலின், மாலதிக்குதொல்லை கொடுத்து வந்துள்ளார். இதில் பெரும் மன உளைச்சலில் இருந்த மாதவி, கடந்த 20ம் தேதி பூச்சு மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த மாலதிவீட்டின் அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாலதிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கொடுத்து வருகின்றனர்.

Advertisment

இந்த விவகாரம் அறிந்த திருச்சி கண்டோன்மெண்ட் காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு வந்து மாலதியிடம் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் பெறப்பட்ட புகாரின் படி வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ஸ்டாலினை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.