‘அந்த மாமா 'பேட் டச்' பண்றாரு...’ - தாய், சிறுமியிடம் பாலியல் சீண்டல்

Youth arrested by salem police who misbehave to mother and girl child

சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் ஷோபனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. 30 வயதான ஷோபனா, சிறு வயதில் இருந்தே பள்ளி, வீடு என்றே இருந்துள்ளார். பெற்றோர், கணவர் தவிர வேறு யாருடனும் பேசிப் பழகாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஷோபனாவிடம் பாலியல் ரீதியாக அவரை உடலில் சில இடங்களைத்தொட்டுத்தொட்டுப் பேசி வந்துள்ளார். இதற்கிடையே, ஷோபனாவின் பெண் குழந்தைக்கு அவருடைய பெரியம்மா, 'எது எது குட் டச்?' ‘எது எது பேட் டச்?' என்று விளையாட்டாகச் சொல்லிக் கொடுத்துள்ளார். பெண் குழந்தைகளைத்தாய், தந்தை தவிர வெளி ஆள்கள் தொட்டுப் பேசக்கூடாது என்றும், தொடக்கூடாத இடங்களில் தொட்டுப் பேசினால் அதுபற்றி உடனடியாக வீட்டில் சொல்ல வேண்டும் என்றும் சிறுமியிடம் கூறியுள்ளார்.

இதை உள்வாங்கிக் கொண்ட அந்தச் சிறுமி, தன் வீட்டுக்கு அடிக்கடி வரும் ஒரு மாமா என்னையும், தாயையும் தொடக்கூடாத இடங்களில் தொட்டுத்தொட்டுப் பேசுகிறார் என்று மழலை மொழியில் கூறியிருக்கிறாள். இதுகுறித்து ஷோபனாவிடம் விசாரித்தபோது, குழந்தை சொன்னது உண்மை என்று தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெரியம்மா, இதுகுறித்து சைல்டு லைன் அமைப்பின் 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.

மேலும், அம்மாபேட்டை மகளிர் காவல்நிலையத்திலும் சந்தேகத்திற்குரிய இளைஞர் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

police Salem
இதையும் படியுங்கள்
Subscribe