/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/997_98.jpg)
3 வயதுக் குழந்தையைக் காலால் மிதித்துக் கொன்ற இளைஞரைபோலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள சீராப்பள்ளி பகுதியில் கபில்வாசன், ராஜாமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில், சம்பவத்தன்று அவரது உறவினர் ராகுல் என்பவர் கபில்வாசன்வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் கபில்வாசன் வேலை காரணமாகவெளியே சென்றிருந்த நிலையில், ராகுல் ராஜாமணியிடம்குடிப்பதற்குத்தண்ணீர் கேட்டுள்ளார்.அவர் தண்ணீர் எடுப்பதற்காக உள்ளே சென்ற நிலையில், ராகுல், வீட்டில் படுத்திருந்தமூன்று வயது குழந்தையை அடித்தும், காலால் மிதித்தும் தாக்கியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜாமணி சத்தம் போட்டுக் கூச்சலிட்டு உள்ளார்.
இதையடுத்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்ஏற்கனவே இறந்துவிட்டதாகத்தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நாமகிரிப்பேட்டை போலீசார் குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உறவினர் ராகுலையும்கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)