Advertisment

2 வழக்குகளில் கைதான இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

Youth arrested in 2 cases sentenced to 23 years in prison in erode

Advertisment

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் புவனேந்திரன். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு, 11 ஆம் வகுப்பு மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் ஈரோடு காவல்துறையினர் புவனேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து, பிணையில் வந்த புவனேந்திரன், அதே மாணவியைக் கொலை முயற்சி செய்ததாகக் கூறப்பட்டது. அந்த புகாரின் பேரில், புவனேந்திரனை போலீசார் மீண்டும் கைது செய்து ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், புவனேந்திரனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனைவிதித்து தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், 2 வழக்குகளில் கைது செய்யப்பட்ட புவனேந்திரனுக்கு இன்று (16-02-24) ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில், புவனேந்திரனுக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டையும்ரூ.30,000 அபராதம் விதித்தும் அதிரடிஉத்தரவிட்டுள்ளது.

Erode Prison
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe