
ஆன்லைன் கடன் செயலிகளில் கடன் பெற்று அதன் மூலம் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் திருவாரூரில் ஆன்லைன் கடன் செயலியில்கடன் பெற்ற இளைஞர் கடனைத்திருப்பிச் செலுத்தியபிறகும், அவருடைய புகைப்படத்தை மார்ஃபிங் செய்து மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதால்இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஆன்லைன் கடன் செயலியில் கடன் பெற்றிருந்த நிலையில், வாங்கிய கடன் தொகையைக் கட்டியுள்ளார். இருப்பினும் அவருடைய புகைப்படத்தை நிர்வாணமாக மார்ஃபிங் செய்து மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வலங்கைமான் காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர் ராஜேஷிற்கு சவுத் ஆப்பிரிக்காவிலிருந்து வாட்ஸ்அப் கால் வந்துள்ளதைக் கண்டறிந்த காவல்துறையினர், அது குறித்தும்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)