திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சித்தையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட நரசிங்கபுரத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் பிரேம்குமார், புதுப்பட்டி ராஜ்குமார் மகன் சடையாண்டி, நாகயம்பட்டியை சேர்ந்த சடையாண்டி மகன் சபரீஸ்வரன் மற்றும் அதே ஊரை சேர்ந்த சேகர் மகன் ராம்ஜி ஆகிய நான்கு பேரும் நண்பர்கள். இவர்களின் நண்பர் இருவர் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர்.

Advertisment

Youth addicted to cannabis near dindigul    ​

தினசரி விலை கொடுத்து கஞ்சா வாங்கி சிகரட்டில் ஏற்றி குடிப்பதற்கு பதிலாக நாமே கஞ்சாவை பயிரிடலாம் என முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் இவர்கள் புதுப்பட்டி பாண்டி குளம் கரையோரம் கழிவுநீர் வாய்க்கால் அருகே சுமார் இரண்டரை சென்ட் அளவுக்கு கஞ்சாவை பயிரிட்டு இருந்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கஞ்சாவை பயிரிட்டு குடம் மூலம் தண்ணீர் எடுத்து கஞ்சா செடிகளுக்கு

ஊற்றி வந்தனர்.

இதைப்பார்த்து சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் செம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த செம்பட்டி காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் கஞ்சா செடிகளை வேரோடு பறித்து செம்பட்டி காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தனர். இப்படி பறிக்கப்பட்ட கஞ்சா செடியின் எடை ஆறு கிலோவுக்கு மேல் இருந்தது.

இதையடுத்து கஞ்சா பயிரிட்ட பிரேம்குமார், சடையாண்டி, சபரீஸ்வரன், ராம்ஜி ஆகிய 4 பேரை செம்பட்டி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் இப்படி இளைஞர்கள் தைரியமாக கஞ்சா பயிரிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.