ADVERTISEMENT

'உங்கள் வாழ்வில் இனி தென்றல் வீசப்போகிறது...'- 'கல்லூரி கனவு' திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் பேச்சு!

12:51 PM Jun 25, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

'நான் முதல்வன்' என்ற திட்டத்தின் கீழ் பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் 'கல்லூரி கனவு' என்ற திட்டத்தை இன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

உயர் கல்வித்துறை, தொழில்நுட்ப கல்வி இயக்ககம், பல்கலைக் கழகங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஹெச்.சி.எல் நிறுவனத்திற்கும் திறன் மேம்பாட்டு கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஹெச்.சி.எல் நிறுவனம் அரசுப் பள்ளி மாணவர்கள் 2,500 பேரை தேர்வு செய்து பயிற்சி, பணி ஆணை வழங்க ஏற்பாடு செய்துள்ளது. மாணவர்களுக்கு ஹெச்.சி.எல் நிறுவன பயிற்சிக்கான முழு செலவையும் தமிழக அரசே ஏற்க உள்ளது. 'கல்லூரி கனவு' நிகழ்ச்சி ஜூன் 29, 30, ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் அனைத்து மாவட்டங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற 'கல்லூரி கனவு' திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''அறிவை விரிவு செய் அகண்டமாக்கு... விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை.. அணைந்துகொள்... உன்னை சங்கமமாக்கு... மானிட சமுத்திரம் நானென்று கூவு... என பாடினார் பாவேந்தர் பாரதிதாசன். உங்களுக்கு நான் சொல்வது இதுதான். இன்று முதல் புதிய மனிதர்களாக நீங்கள் ஆகுகிறீர்கள். வருங்கால சமுதாயம் உங்களுக்கு ஒளிமயமானதாக மாறப்போகிறது. உங்கள் வாழ்வில் தென்றல் வீசப்போகிறது. உங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றுவதற்கான வாய்ப்பை பெற்றதற்காக நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன். கலையில், அறிவியலில், மருத்துவத்தில், பொறியியலில், சட்டத்தில் என உங்கள் அறிவு மேம்பாடு அடையட்டும்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT