Advertisment

டாஸ்மாக் கடை சூப்பர்வைசரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற இளைஞர்கள்

younster tried to extort money from the Tasmac shop supervisor

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. ஏற்கனவே இந்த மதுபானக் கடை ஒன்றின் பாரில் நுழைந்து கேஷியரை சரமாரியாகவெட்டிக்கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

இந்த நிலையில் மற்றொரு டாஸ்மாக் கடையில், சூப்பர்வைசராகப் பணிபுரிந்து வருபவர் ஊட்டியைச் சேர்ந்த விஜய் ஆனந்த். இவர் நேற்று மதியம் வழக்கம் போல் கடையில் விற்பனையான சுமார் பத்து லட்சம் கலெக்சன் பணத்தை எடுத்துக்கொண்டு மேட்டுப்பாளையம் இந்தியன் வங்கிக்கு டெபாசிட் செய்ய ஆலாங்கொம்பு வழியாகச் சென்றுள்ளார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவர் மீது மோதுவது போல் வந்து கீழே விழச் செய்துள்ளனர்.

Advertisment

அவர் கீழே விழுந்த நேரம், இரண்டு டூவீலர்களில்பட்டாக்கத்தியுடன் வந்த மர்ம நபர்கள்அவரிடம் இருந்த பணத்தைப் பறிக்க முயன்றுள்ளனர். இதனைப் பார்த்த அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஒரு கட்டத்தில் மக்கள் கூடவே சூப்பர்வைசரை பட்டாக்கத்தியால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துவிட்டு, தாங்கள் வந்த டியூக் பைக்கில் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதே சூப்பர்வைசரை மேட்டுப்பாளையம் இந்தியன் வங்கி அருகிலேயே கத்தியால் குத்திவிட்டு பணம் பறிக்க முயன்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

trichy TASMAC
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe