Youngsters gathered in front of the shop-shirt for a rupee

ஜவுளி விற்பனைக்கு பெயர் போன ஈரோட்டில் ஒரு ரூபாய்க்கு டீ சர்ட் விற்பதாக ஜவுளி நிறுவனம் ஒன்று அறிவித்த நிலையில் கடையின் முன்பு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது தீபாவளி பண்டிகை காலம் நெருங்கி வருவதால் ஜவுளி நிறுவனங்கள் பல்வேறு அதிரடி சலுகைகளை கொடுத்து துணிகளை வியாபாரம் செய்து வருகிறது. ஈரோடு காந்திஜி சாலையில்ஏராளமான ஜவுளிக்கடை நிறுவனங்கள் உள்ளது. இந்த கடைகளில் விற்பனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக திடீர் திடீர் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தனியார்ஜவுளிக்கடை ஒன்று ஒரு ரூபாய்க்கு ஒரு டி-ஷர்ட் என்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதனையறிந்த அந்த பகுதி இளைஞர்கள் கடை திறப்பதற்கு முன்பாகவே கடை வாசலில் நிற்க முன்றனர். சுமார் 1500 க்கு மேற்பட்டோர் நின்றதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.