Skip to main content

மது பாட்டில் கொண்டு பேருந்து கண்ணாடி உடைப்பு! இளைஞர்கள் அராஜகம்! 

Published on 11/06/2022 | Edited on 11/06/2022

 

youngsters broken government bus glass

 

கள்ளக்குறிச்சி நகரில் உள்ள ராஜா நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் தமிழரசன், அவரது நண்பர்கள் பரத், கவுதம், சாகுல் ஆகிய நால்வரும் சேலத்திலிருந்து - சென்னைக்கு சென்ற அரசு பேருந்தில் ஏறுவதற்கு கள்ளக்குறிச்சி நகரில் பேருந்திற்கு கை காட்டி நிறுத்தியுள்ளனர். ஆனால், பேருந்து நிற்காமல் சென்றது. இதைக் கண்டு ஆத்திரமடைந்த மேற்படி நால்வரும், பேருந்தை துரத்திச் சென்று வழிமறித்து நிறுத்தியுள்ளனர். பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரையும் அருவருப்பான வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.

 

அதோடு அவர்கள் கையில் வைத்திருந்த மது பாட்டிலால் பேருந்து கண்ணாடிகளை உடைத்தனர். அப்போது பேருந்தில் பயணம் செய்த கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு இடது கண்ணில் காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேருந்து கண்ணாடியை உடைத்து ஒருவருக்கு காயம் ஏற்பட காரணமாக இருந்த நால்வரையும் கைது செய்துள்ளனர்.  

 

சார்ந்த செய்திகள்