Youngster passes away in birthday party near vellore

Advertisment

வேலூர் மாவட்டம், மேல்பட்டி சாமரிஷி குப்பத்தைச் சேர்ந்தவர் 24 வயதான அஜித். சின்னச் சின்ன கூலி வேலைகள் செய்துவந்தார். இவருக்கு, ஜனவரி 10ஆம் தேதி பிறந்தநாள் எனக் கூறப்படுகிறது. தனது பிறந்தநாளை முன்னிட்டு நண்பர்களுடன் ஏரிக்கரையில் கேக் வெட்டி குதுகலமாகக் கொண்டாடியுள்ளார்.

அந்த வழியாக,இருசக்கர வாகனத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான ரீகன், 27 வயதான ராபீன், 23 வயதான சின்னா ஆகியோர் வந்துள்ளனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. வழியில் கேக் வெட்டுவது தொடர்பாகக் கேள்வி எழுப்ப இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

வாய்த் தகராறு அடிதடியாகியுள்ளது. போதையில் இருந்ததாகக் கூறப்படும் ரீகன், ராபீன், சின்னா ஆகிய மூவரும் தாங்கள் வைத்திருந்த கத்தியால் அஜித்தை சரமாரியாகக் குத்தியுள்ளனர். இதனைத் தடுக்கவந்த அஜித்தின் உறவினர் 46 வயதான வேலுவையும் கத்தியால் குத்திவிட்டு அந்த 3 பேரும்தப்பிச் சென்றுள்ளனர்.

Advertisment

கத்தி குத்துப்பட்ட இருவரையும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். குடியாத்தம் அரசு மருத்துவமனையில் வேலு அனுமதிக்கப்பட்டார். ஆம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அஜித் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக, மேல்பட்டி காவல்நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தந்ததன் அடிப்படையில், புகார் பதிவு செய்த காவல்துறை, கொலை செய்துவிட்டு தப்பிய மூவரையும் கைது செய்தனர். பிறந்தநாள் பார்ட்டி சம்மந்தப்பட்டவரை பலி வாங்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.