ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் விழுந்து இளைஞர் தற்கொலை - சோக சம்பவத்தின் சிசிடிவி பதிவு!

youngster bus incident Andhra Pradesh

கடும் விரக்தியில் சில மனிதர்கள் எடுக்கும் தவறான முடிவுகள் கொடுமையாக இருக்கின்றன. ஆந்திர மாநிலம், நந்தியாலா அருகிலுள்ள பங்கனபள்ளி பேருந்து நிலையத்தில், அப்படி ஒரு கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம், நந்தியாலா அருகிலுள்ள பங்கனபள்ளி பேருந்து நிலையத்தில், சுற்றுமுற்றும் பார்த்தபடியே இருந்த ஒருவர், திடீரென்று அங்கிருந்து கர்னூல் செல்லும் அரசுப் பேருந்தின் சக்கரத்தில் விழுந்து தற்கொலை செய்துள்ளார்.

இதனைப் பார்த்துக்கொண்டிருந்த பயணிகள் போட்ட கூச்சலைத் தொடர்ந்து, ஓட்டுநர் அந்தப் பேருந்தை நிறுத்தினார். அதற்குள், அவர் மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த பங்கனபள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவருடைய உடலைக் கைப்பற்றி, அந்த நபர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம், அந்தப் பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, வீடியோ வைரலாகி வருகிறது.

Andrahpradesh bus police
இதையும் படியுங்கள்
Subscribe