பொள்ளாச்சி அருகே16 வயது சிறுமி தனியார் மில்லிற்கு வேலைக்குச் சென்று வருகிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் அருப்புக் கோட்டையைச் சேர்ந்தஅஜய் சர்மா ராஜ் (20) எனும் இளைஞர் அந்த சிறுமியை காதலிப்பதாய் சொல்லியிருக்கிறார்.இருவரும் அடிக்கடி சந்தித்த நிலையில், இருவரும் காதலித்து வந்துள்ளனர்.சிறுமியும், அஜய் சர்மா ராஜும்செல்பேசி எண்ணை பரிமாறிக் கொண்டு பேசி வந்துள்ளனர்.இதனையடுத்து அஜய் சர்மா ராஜ்,சிறுமியிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
சிறுமி காணமால்போனதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கோட்டூர் காவல் நிலையத்தில் சிறுமி காணவில்லை என புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில்கோட்டூர் காவல் துறையினர்சிறுமியை தேடிவந்தனர்.இந்நிலையில், சிறுமியையும், அஜய் சர்மா ராஜையும் போலீஸார் அருப்புக்கோட்டையில்மீட்டனர். அதன்பின் அவர்களை பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.பின்னர் பொள்ளாச்சிஅனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மேற்கொண்ட விசாரணையில், அஜய் சர்மா ராஜ்,சிறுமியை பல முறைபாலியல் வன்கொடுமைசெய்தது தெரியவந்தது.இதனையடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அஜய் சர்மா ராஜைபோக்சோ சட்டத்தில் கைது செய்து போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.