தமிழகத்தில் காவல், சிறை, தீயணைப்பு, மற்றும் மீட்பு பணிகள் உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள 8,888 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம், கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி, 32 மாவட்ட தேர்வுமையங்களில் நடத்தியது. இத்தேர்வில், 3 லட்சத்து 22 ஆயிரத்து 76 பேர் பங்கேற்றிருந்தனர்.

Advertisment

அடுத்தக்கட்ட தேர்வான உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு, உடற்திறன் போட்டி மற்றும் அசல் சான்றிதழ் சரிபார்த்தல் 1:5 என்ற விகிதத்தில் கலந்து கொள்வதற்குத் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் பதிவு எண்களும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமத்தின் இணையதளத்தில் செப்டம்பர் 26ம் தேதி வெளியிட்டனர்.

Youngster  arrested in Perambalur for cheating in police exam

இதில் பெரம்பலூரை சேர்ந்த 25 வயது நிரம்பிய சிந்தனைவளவன் காவல்துறை தேர்வு எழுதியிருக்கிறான். தேர்வில் அவன் எதிர்பார்த்த படி வெற்றிபெறாமல் தோல்வி அடைந்ததால் என்ன செய்வது என்று யோசித்து. எப்படியும் அடுத்தக் கட்ட உடற்தகுதி தேர்வுக்குச் செல்ல வேண்டும் முடிவு செய்து இவனுடைய தேர்வு எண்ணுக்கு அடுத்த 10 எண்களுக்கு அடுத்துத் தேர்வில் வெற்றிபெற்ற பழனிசாமி என்பவனின் உடற்தகுதி அழைப்பு கடித்தை டவுன்லோடு செய்து பிடிஎப். எடிட்டர் என்கிற சப்ட்வேர் மூலம் புதிய அழைப்பு கடித்தை எடுத்துக்கொண்டு இன்று காலையில் திருச்சி ஜமால்முகமது கல்லூரியில் நடைபெற்ற உடற்தகுதி தேர்வுக்குச் செல்லாமல் நேரடியாக உடற்திறன் போட்டியில் உள்ளே நுழைந்து நான் ஓட வேண்டும் என்று அந்த அழைப்புக் கடிதத்தைக் கொடுக்கவும்.

Advertisment

Youngster  arrested in Perambalur for cheating in police exam

அழைப்புக் கடிதத்தைப் பரிசோதனை செய்த அந்த அதிகாரிஏன் உடற்தகுதி தேர்வுக்குச் செல்லாமல் ஏன் இங்கே வந்திருக்கிறான். என்று யோசித்து உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டிருந்த பழனிசாமியை கூப்பிட்டு விசாரித்த போது.. சார்.. நான் உண்மையிலே தேர்வு எழுதி வெற்றிபெற்றேன். என்று அழுது புரண்டிருக்கிறார். பிறகு போலீஸ் பாணியில் விசாரித்தபோது பிடிஎப் எடிட்டர் சாப்ட்வேர் முறையில் எடிட் செய்வதை வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்.

இதன் பிறகு கே.கே.நகர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு சிந்தனைவளவன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.