உத்தமபாளையம் அருகே செல்போன் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்த வியாபாரியை இளம் பெண் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/2_119.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் அருகே இருக்கும் ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வாழை இலை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் உறவினர் பாண்டீஸ்வரன். அவரது மனைவி நிரஞ்சனா. இவர்கள் ஒத்த பட்டியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் மணிகண்டன் கடந்த சில நாட்களாகவே நிரஞ்சனா வுக்கு செல்போன் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால் நிரஞ்சனாவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. மேலும் நிரஞ்சனா பற்றி தவறாக மணிகண்டன் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். இந்த விஷயம் கணவர் பாண்டீஸ்வரனுக்கு தெரிய வர, அவர் நிரஞ்சனாவிடம் இதுகுறித்து கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் ராயப்பன்பட்டியிலுள்ள மணிகண்டன் வீட்டுக்குச் சென்று மணிகண்டனிடம் இருவரும் இதுதொடர்பாக கேட்டுள்ளனர் ஆனால் அவர் மழுப்பலாக பதில் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நிரஞ்சனா மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மணிகண்டனை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதை பார்த்ததும் பாண்டீஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் நிரஞ்சனா அருவாளுடன் ராயப்பன்பட்டி போலீசில் சரண் அடைந்தார்.
பின்னர் போலீசார் விரைந்து சென்று மணிகண்டன் உடலை கைப்பற்றி உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர் நிரஞ்சனாவை போலீசார் கைது செய்தனர்.அதோடு தப்பி ஓடிய கணவர் பாண்டீஸ்வரனையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைதான நிரஞ்சனா தனக்கு மணிகண்டன் செல்போன் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் அவரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் உத்தமபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)