சொத்து தகராறில் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி

younger brother committed incident property dispute

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த ஆயிப்பேட்டை கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் ஆதிநாராயணமூர்த்தி(40). இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது சகோதரர் ஸ்ரீராம்(35). ஆதிநாராயணமூர்த்திக்கும், அவரது சகோதரர் ஸ்ரீராமுக்கும் கடந்த சில வருடங்களாக நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று ஸ்ரீராம் அவரது மனைவி சித்ரா ஆகியோர் ஆதிநாரயணமூர்த்தி மற்றும் அவரது மனைவி மகேஸ்வரியிடம் நிலம் சம்பந்தமாக கேள்வி கேட்டுள்ளனர். அப்பொழுது இருதரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், ஸ்ரீராம் மனைவி சித்ரா ஆதிநாராயணமூர்த்தி மூர்த்தி மனைவி மகேஸ்வரி ஆகியோர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். ஸ்ரீராம் தனது அண்ணன் ஆதிநாராயணமூர்த்தியை இரும்பு கம்பியால் தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஆதிநாரயனமூர்த்தியை அருகில் இருந்த உறவினர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு செல்லும் வழியில் ஆதிநாராயணமூர்த்தி உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மகேஸ்வரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து தகராறில் அண்ணனை தம்பி அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

brother Cuddalore police
இதையும் படியுங்கள்
Subscribe