வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்கம் நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபம் அருகே இளம்பெண் ஒருவர் குடிபோதையில் அந்த வழியாக செல்வோரிடம் ரகளையில் ஈடுபடுவதாகவும் மண்டபத்தில் உள்ள நிதி நிறுவனத்தில் உள்ள சாவிகளை எடுத்துக்கொண்டு ஆபாசமாக பேசுவதாகவும் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து குடியாத்தம் நகர போலீஸ் அங்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரிடமும் அந்த பெண் ரகளையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அதே பகுதியில் இரண்டு தெருக்கள் தள்ளி வீட்டில் வசிப்பதாகவும், தன்னை காப்பாற்றுமாறும் போதையில் உளறிக் கொண்டே இருந்தார்.
பின்னர் போலீசார் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றிச்சென்று அவரது வீட்டில் இறக்கி விட்டனர். குடிபோதையில் பெண் ரகளையில் ஈடுபட்ட சம்பவத்தால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.