young woman who saved the lives of 7 people Government Hospital

உயிரிழந்தும் 7 பேரின் உயிரைக் காப்பாற்றிய இளம்பெண்ணிற்குச் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டுள்ளது.

Advertisment

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சம்பத்குமார் என்பவரது மகள் கீர்த்தி(21) சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் திருமண நிகழ்ச்சிக்காகத் தனது தோழியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற கீர்த்தி கும்மிடிப்பூண்டி அருகேஏற்பட்ட விபத்தில் சிக்கினார். அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கீர்த்தி திடீரென மூளைச்சாவு அடைந்தார்.

Advertisment

இந்த நிலையில் கீர்த்தியின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க குடும்பத்தினர் முன்வந்ததால், 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. இதனைப் போற்றும் வகையில் கீர்த்தியின் உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனை முதல்வர், மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் எனப் பலரும் சிறப்பு மரியாதை அளித்தனர்.மேலும் கீர்த்தியின் உறவினர்கள், கீர்த்தியின் வருமானத்தை மட்டுமே நம்பிஅவரது குடும்பம் இருந்தது. தற்போது அவர் உயிரோடு இல்லை, அதனால் தமிழக அரசு அவரது குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.