Advertisment

வேலை தேடி வந்த இளம் பெண்; திருப்பூரில் நேர்ந்த கொடூரம்!

A young woman who came looking for work; incident that befell her in Tiruppur

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வேலை தேடி திருப்பூர் வந்துள்ளார். அதன்படி அங்குள்ள நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்துள்ளார். அதன் பின்னர் வேலை பிடிக்கவில்லை என்பதால் மீண்டும் சொந்த ஊரான ஒடிசா மாநிலத்திற்கே செல்ல முடிவு எடுத்துள்ளார். அதன்படி அந்த பெண், தனது கணவர் மற்றும் குழந்தையுடன் திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

Advertisment

அப்போது அங்கு வந்த பீகாரைச் சேர்ந்த 3 மூன்று இளைஞர்கள் வேலை வாங்கி தருவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பின்னர் அப்பெண்ணின் கணவரைக் கட்டிப்போட்டு விட்டு, கணவன் மற்றும் குழந்தையின் கண் முன்னே கத்தியைக் காட்டி அப்பெண்ணை 3 இளைஞர்களும் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார்.

Advertisment

இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு கத்தி முனையில் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்களையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நதீம், டானீஷ் மற்றும் முர்சித் என்பது தெரியவந்துள்ளது. திருப்பூரில் கத்தி முனையில், கணவர் மற்றும் குழந்தையின் கண் முன்னே வட மாநில பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

arrested police Bihar woman Tiruppur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe