அரசு பள்ளியில் மாணவி பலாத்காரம் - வீடியோ எடுத்து பரப்பிய காதலனை தேடும் போலீஸ்

 student

பள்ளியில் மாணவியை பலாத்காரம் செய்து, அந்த வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பிய காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், வீரபெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாணவி அங்குள்ள அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் நட்பு இருந்துள்ளது. நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பள்ளி விடுமுறையின்போது மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்த சதீஷ், மாணவியை அரசு பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அவரை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை தனது செல்போனில் வீடியோவாக எடுத்த அவர், தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.

இந்த வீடியோ மாணவியின் தந்தையின் நண்பருக்கு எப்படியோ வந்துள்ளது. இதனை பார்த்த அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் மாணவியின் தந்தையை அழைத்து இந்த விசயத்தை சொல்லியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், மகளை விசாரித்துள்ளனர். மகள் நடந்ததை கூறியதும், உடனடியாக கடலூரில் உள்ள குழந்தைகள் நல தடுப்பு நலக்குழுவிடம் சொல்லியுள்ளார்.

இதனையடுத்து அந்த குழுவின் தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரன், மாணவியிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவரை மருத்துவ பரிசோனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பண்ருட்டி அனைத்து காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரை பெற்ற போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.

Rape student
இதையும் படியுங்கள்
Subscribe