Advertisment

திருமணத்திற்கு சேமித்த பணம்; இளம்பெண்ணுக்கு சேர்ந்த சோகம்

 young woman Rs. 4 lakhs Online fraud

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்த பரசுராமன் என்பவரது மகள் 19 வயது காவியா, ஆண்ட்ராய்டு செல்போன் பயன்படுத்துவதில் ஆர்வமாக இருந்துள்ளார். அதன் அடிப்படையில் அவரது செல்போனில் மர்ம நபர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காவியாவை தொடர்பு கொண்டுள்ளார். அந்த மர்ம நபர் சிறிதளவு தொகையை காவியாகணக்கிற்கு அனுப்பி செல்போனில் டாஸ்க் எனப்படும் விளையாட்டை விளையாடுமாறு கூறியுள்ளார். பின்னர் மர்ம நபர் அந்த விளையாட்டில் அதிக பணம் கிடைக்கும் என்று கூறவே, முழுவதுமாக நம்பிய காவியா சிறிய தொகையை கட்டி விளையாடி வெற்றியும் பெற்றிருக்கிறார். அதற்கு ஒரு தொகையைக் காவியாவிற்கு அந்த நபரே அனுப்பியும் வைத்துள்ளார்.

Advertisment

இந்த விளையாட்டின் மூலம் அதிக பணம் கிடைக்க வேண்டும் என்று அந்த நபர் கூறிய பொய்யை நம்பி, தனது திருமணத்திற்காக வைத்திருந்த ரூ. 3 லட்சம், தனது தாய் வங்கி கணக்கில் இருந்த ரூ.1 லட்சம் மற்றும் உறவினர் வங்கி கணக்கில் இருந்து ரூ, 40 ஆயிரம் என ரூ.4 லட்சத்திற்கு மேல் பணத்தை அந்த நபர் சொன்ன வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால் அந்த நபர் கூறியபடி பணம் வரவில்லை. மேலும் அந்த நபர் தனது தொடர்பை துண்டித்துக் கொண்டுள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த காவியா விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறை அந்த மர்ம நபரைத்தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisment

police villupuram woman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe