Advertisment

“பேய் என்னை வாழவிடல..” - தீக்குளித்து உயிரைவிட்ட இளம்பெண்!

Young woman passes away in virudhunagar

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகா, மந்திரிஓடை வாழவந்தாள்புரத்தில் வசித்து வருகிறார் வீராச்சாமி. எட்டு வருடங்களுக்கு முன் தனது மகள் அழகுராணியை, மனைவியின் தம்பி தர்மராஜுக்கு திருமணம் செய்துவைத்தார். தர்மராஜ் – அழகுராணி (வயது 30) தம்பதியருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.

Advertisment

அழகுராணிக்கு பேய் பிடித்துவிட்டதாக நம்பிய வீராச்சாமி, பல இடங்களில் கோடாங்கியிடம் குறிபார்த்தும் குணமாகவில்லை. இந்நிலையில், மருமகன் தர்மராஜ் வீராச்சாமிக்கு போன் பண்ணி “அழகுராணி வீட்டுக்குள்ள போயி தீ வச்சிருச்சு. உடனே வாங்க” என்று அழைத்திருக்கிறார். தன் மனைவியுடன் சென்று, மகள் அழகுராணியை வீராச்சாமி பார்த்தபோது, உடம்பு முழுவதும் தீக்காயங்களுடன் வெளியில் படுக்கவைத்திருந்தனர்.

Advertisment

“ஏம்மா இப்படி பண்ணிட்ட?” என்று பதற்றத்தோடு அழகுராணியிடம் பெற்றோர் கேட்டபோது “எனக்குப் பிடித்த பேய் என்னை வாழவிடமாட்டேங்குது. அதனால, எனக்கு வாழப் பிடிக்கல. மண்ணெண்ணெய்யை ஊத்திக்கிட்டு எனக்கு நானே தீ வச்சிக்கிட்டேன். என் பிள்ளைகளையும் புருஷனையும் பார்த்துக்கங்க” என்று முனகியிருக்கிறார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அழகுராணியைச் சேர்த்தும், சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார். ஆவியூர் காவல்நிலையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.

Virudhunagar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe