Advertisment

இளம்பெண் திடீர் மரணம்! உறவினர்கள் சாலை மறியல்  போராட்டம்! 

Young woman passed  away police investigation

Advertisment

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் புது தெருவைச் சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி வைஷ்ணவி. இவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. தினேஷ் சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று திடீரென வைஷ்ணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வைஷ்ணவி பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர். அவர்கள் வைஷ்ணவி கணவர் வீட்டுக்கு சென்று வைஷ்ணவி உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் மகளின் சாவில் மர்மம் உள்ளது. மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. தினேஷ் அவரது சகோதரிகள் அவரை கொலை செய்துள்ளனர் என்று புகார் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உடையார்பாளையம் போலீசார் வைஷ்ணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் வைஷ்ணவியின் மரணத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி வைஷ்ணவியின் பெற்றோர்கள் உறவினர்கள் உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை விரைந்து எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பிறகு சாலை மறியல் போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர் இளம்பெண்ணின் மரணம் கொலையா தற்கொலையா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Ariyalur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe