Advertisment

"நீ இல்லாம நான் எதுக்கு உயிரோடு இருக்கணும்" - உருக்கமான கடிதம் எழுதிவிட்டு உயிரைவிட்ட இளம்பெண்

Young woman passed away love issue

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகில் உள்ள பழைய சிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஐயாத்துரை என்பவரின் 22 வயது மகள், கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். ரிஷிவந்தியம் அருகில் உள்ள நூரோலை கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் ஆகாஷ். இவர்கள் இருவரும் தங்கள் பள்ளிகாலத்தில் இருந்தே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களது காதல் சமீபத்தில் இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்து பிரச்சனையாகியுள்ளது. இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆகாஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதன் பிறகு ஐயாத்துரை தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்துள்ளார். இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என மாவட்ட சமூகநல அலுவலருக்கு ஐயாதுரை மகள் புகார் செய்து நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். அதன் பிறகு பெற்றோருடன் வசிக்காமல் சில நாட்கள் பெண்கள் விடுதியில் தங்கி இருந்துள்ளார்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு இறந்துபோன தனது காதலரான ஆகாஷ் வீட்டிற்கு சென்ற அங்கு தங்கியிருந்துள்ளார். காதலனை மறக்க முடியாத அவர், கடந்த 17ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.

Advertisment

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரிஷிவந்தியம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் எழுதி வைத்திருந்த மூன்று பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றி, அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த கடிதத்தில், “என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என்னால் என் காதலன் ஆகாஷ் இல்லாமல் இருக்க முடியவில்லை. அவரது நினைவு என்னை வாட்டுகிறது. அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அந்த இடத்தை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன். அவர்கூட நான் பழகியது, வாழ்ந்தது எல்லாம் எப்போதும் எந்தக் காலத்திலும் மறக்கமுடியாதது. அதனால் அவருடன் வாழ்ந்ததுதான் என் கடைசி வாழ்க்கை. எனக்கு கணவர் அவர் மட்டும்தான். ஆகாஷ் நீ இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம். நீ மட்டும் தான் என்னோட உலகம், நீ இந்த உலகத்தில் இல்லாமல் நான் எதுக்கு உயிரோடு இருக்கணும். மேலும் அப்பா அம்மா தம்பி பாப்பா எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள். என்னோட மாமா இல்லாமல் எனக்கு வாழ பிடிக்கவில்லை. நான் இறந்த பிறகு அவரை அடக்கம் செய்த இடத்தில் என்னையும் அடக்கம் செய்யுங்கள்” என்ற உருக்கமான மூன்று பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

police kallakurichi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe