Skip to main content

இளம் பெண் உயிரைப் பறித்த செல்போன்! 

Published on 18/05/2022 | Edited on 18/05/2022

 

Young woman passed away due to cellphone

 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த வின்னப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவேல். இவரது மனைவி சாந்தா. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அனைவருக்குமே திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதில் மூன்றாவது மகள் 24 வயது மித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 2015-ம் வருடம் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரிய குளத்தைச் சேர்ந்த குமார் என்பவருடன் மித்ராவுக்கு திருமணம் நடந்தது. 


குமார் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், மித்ரா அடிக்கடி செல்போனிலேயே நேரத்தை செலவிடுவதும் அடிக்கடி யாருடனோ போனில் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.


இதனை அவரது கணவர் குமார் கண்டித்துள்ளார். மேலும் தனது மாமியார் மித்ராவின் அம்மாவிடம் இந்த விவகாரம் குறித்து கூறி மகளுக்கு புத்திமதி கூற வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதனையடுத்து தாயார் சாந்தா செல்போனில் பேசுவது குறித்து மகளிடம் கண்டித்துள்ளார். இந்த நிலையில், 16ந் தேதி திங்கள்கிழமை வழக்கம் போல் மித்ரா செல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டு இருந்துள்ளார். இதை அவரது கணவர் குமார் கண்டித்துள்ளார். பின்னர் அவர் வெளியே சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மித்ரா, திடீரென வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மித்ரா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்