Advertisment

தீராத வயிற்று வலி; இளம்பெண் எடுத்த விபரீத முடிவு 

 young woman lost their life due to intractable stomach pain

ஈரோடு, வில்லரசம்பட்டி, அடுக்குப்பாறை, மதுரைவீரன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (35). இவரது கணவர் மாரிச்சாமி(40).சரஸ்வதிக்கு வயிற்று வலி பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்துள்ளார். வலி குறையாமல் அவதிப்பட்டு வந்த சரஸ்வதி, அடிக்கடி புலம்பி வந்துள்ளார். அவருக்கு கணவரும், சரஸ்வதியின் தாய் சாந்தியும் ஆறுதல் கூறி வந்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், கடந்த 20 ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ஃபேன் மாட்டும் கொக்கியில் துப்பட்டாவால் தூக்கு மாட்டிக் கொண்டுள்ளார். வெளியில் சென்று வந்த தாய் சாந்தி, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் சரஸ்வதியை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே சரஸ்வதி இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து, ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisment
woman Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe