காட்டுக்குச் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; அதிர்ச்சியில் கிராம மக்கள்!

Young woman incident in leopard beaten

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் பஞ்சாயத்திற்கு உட்பட்ட துருகம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம். இவருக்கு 5 மகள்கள் உள்ளனர். அதில் நான்கு மகள்களுக்கு திருமணமான நிலையில் கடைசி மகள் அஞ்சலி (24) பிகாம் பட்ட படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இவர்களது வீடு துருகம் வனப்பகுதி ஒட்டியுள்ள காப்புகாட்டு பகுதியில் உள்ளது.

இந்நிலையில் பகல் 2 மணிக்குப் பசு மாடுகளை மேய்ச்சலுக்கு காப்பு காட்டிற்கு தனியாக அழைத்துச் சென்றுள்ளார். மாலை 3 மணி ஆகியும் மகள் வீடு திரும்பவில்லை என சந்தேகமடைந்த சிவலிங்கம் மகளைத் தேடிக் காப்பு காட்டுக்கு சென்றுள்ளார். அப்பொழுது ரத்தகாயத்துடன் மகள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து வனப்பகுதியில் அஞ்சலியை சிறுத்தை தாக்கியுள்ளது தெரியவந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து வனத்துறையினருக்கும் கே.வி.குப்பம் காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரும் காவல்துறையினரும் நேரில் ஆய்வு செய்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, சிறுத்தையை பிடிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். வனப் பகுதியில் வசிக்கக்கூடிய பொது மக்களுக்கு அச்சமின்றி வாழ ஏற்பாடு செய்து தரப்படும்” எனக் தெரிவித்தார்.

police Vellore woman
இதையும் படியுங்கள்
Subscribe