young woman falls into a castle moat

வேலூர் மாநகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வேலூர் கோட்டையைச் சுற்றி நீர் நிறைந்த அகழி அமைந்துள்ளது. மாலை நேரத்தில் அதிகமான பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளம் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தைச் சாலையோரம் நிறுத்திவிட்டு அகழியின் தடுப்புச் சுவர் மேல் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென பின்பக்கமாக அகழியில் விழுந்துள்ளார்.

Advertisment

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் சத்தம் போடவே பொதுமக்களில் சிலர் ஓடிச்சென்று அகழியில் விழுந்த இளம்பெண்ணை மீட்க முயன்றனர். தொடர்ந்து அங்கு வந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் கயிறு மூலம் இளம் பெண்ணை மீட்டு அனுப்பிவைத்தனர். விசாரணையில், அவர் சைதாப்பேட்டையைச்சேர்ந்த 23 வயது பெண் என்பது தெரியவந்தது.

Advertisment

அந்தப் பெண் தவறி விழுந்தாரா? செல்பி எடுக்கும் போது சம்பவம் நடந்ததா? இல்லை வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோட்டை அகழியில் விழுந்த இளம் பெண்ணால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.