Advertisment

காதலிக்க வற்புறுத்தியதால் வீடியோ கால்-ஐ ஆன் செய்து தூக்கில் தொங்கிய இளம்பெண்!

ிுப

இளம் பெண் ஒருவர் வீடியோ கால் மூலம் ஆண் நண்பரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போதே தூக்கில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை பள்ளிக்கரணை அடுத்துள்ள பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாரதி. இவருக்கு முத்து குமரேசன் என்பவருக்கு ஹலோ ஆப் மூலம் பழக்கம் ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக பேசி வந்துள்ளனர். இவர் ராணுவத்தில் சிப்பாய் ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த இரண்டாம் தேதி பாரதி தங்கள் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்று அங்கே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தற்கொலை செய்யும் முன் வீடியோ காலில் குமரேசனிடம் பேசியுள்ளார். வீடியோ காலில் அவருடன் லைவில் இருக்கும் போதே இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த சென்னை போலிசார் விருதுநகரில் இருந்த முத்து குமரேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தன்னை காதலிக்க பாரதியை அவர் வற்புறுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

Advertisment

sucide
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe