/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/6_183.jpg)
கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் பலவேசம் என்பவரின் மகள் கிருத்திகா(21). இவருக்கும் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே வைராவிகுளம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணமான ஆரம்பக் காலத்தில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கிருத்திகாவும், சேகரும் கடந்த சில மாதங்களாக ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் கிருத்திகா மிகுந்த மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி கிருத்திகா விட்டில் வயலுக்கு தெளிக்கும் பூச்சி கொல்லி மருத்தை குடித்துள்ளார். பின்பு வாயில் நுரைதள்ளி மயங்கி கிடந்த அவரை மீட்ட உறவினர்கள், உடனடியாக கல்லிடைக்குறிச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கிருத்திகாவை கொண்டு சென்றனர்.
இதனைத் தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிருத்திகா நேற்று முன்தினம்(14.6.2025) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
திருமணமான 10 மாதத்தில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)