Young woman with 6 fingers - a clue in the suitcase murder case

சென்னையில் அண்மையில் துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் அருகே உள்ள குமரன் குடில் பகுதியில் சாலை ஓரத்தில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸில் பெண் சடலம் கைப்பற்றப்பட்ட இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

பாலியல் தொழிலாளியான இளம்பெண்ணை மணிகண்டன் என்பவர் வரவழைத்துள்ளார். தனிமையில் இருவரும் உல்லாசமாக இருந்துவிட்டு அதற்கான பணத்தை கேட்ட போது ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் பெண்ணை கொலை செய்து சூட்கேஸில் போட்டு சாலையில் வீசி சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் சேலத்திலும் இதேபோல் சூட்கேஸில் இளம்பெண் சடலம் கேட்பாரற்று சாலையோரப் பகுதியில் வீசப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்துள்ள ஆவாரம்பாளையம் கிராமத்தில் பாலத்திற்கு அடியில் கருப்பு நிற பெரிய ட்ராலி சூட்கேஸ் ஒன்று வீசப்பட்டு கிடந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்தபோது அதில் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது.

Advertisment

அந்த பேக்கிற்குள் பெண் அணிந்திருந்த துணிகள் மற்றும் ஒரு பெட்ஷீட் இருந்தது. பெண்ணின் உடலைக் கைப்பற்றிய போலீசார் உடனே உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் இறந்த பெண் 16 முதல் 18 வயது இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இறந்த பெண்ணின் இரண்டு கைகளிலும் ஆறு விரல்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இதனை முக்கிய துப்பாக எடுத்துக் கொண்ட போலீசார் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய பகுதிகளில் ஆறு விரல்கள் கொண்ட இளம்பெண் யாரேனும் காணாமல் போனார்களா? என விசாரணை செய்து வருகின்றனர். சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள கல்லூரிகளுக்கும் சென்று தனிப்படை போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.