/https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/`1_17.jpg)
இந்திய அளவில்செல்போன்பயன்படுத்தாதவர்கள் எண்ணிக்கை மிகமிகக்குறைவு.செல்போன்பயன்பாட்டிற்காக நகரம் கிராமம் என்ற பாகுபாடு இல்லாமல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது ஓங்கி உயர்ந்துநிற்கும்செல்போன்டவர்கள். அவ்வப்போது உங்கள் இடத்தில்செல்போன்டவர்அமைப்பதற்கு இடம் கொடுத்தால் பல லட்சம் சம்பாதிக்கலாம் என்று கூறி மர்ம நபர்கள் பொதுமக்களிடம்செல்போன்மூலம் தொடர்பு கொண்டு விவசாயிகளிடம் பணம்பறித்துச்செல்வதும் நடந்த வண்ணம் உள்ளன.
மேலும்செல்போன்டவர்அமைக்கப்பட்டுள்ள பகுதியைச் சுற்றிலும் குடியிருக்கும்மக்களுக்குப்பலவிதமான நோய்கள் உருவாகும்.அதற்குக்காரணம்செல்போன்டவரில்இருந்து வெளியேறும் கதிர்வீச்சுகள் தான் என்றும் மக்கள் குடியிருப்பு பகுதிகளில்செல்போன்டவர்அமைக்கக்கூடாது என்று போராட்டங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கின்றன. அப்படிப்பட்டசெல்போன்டவர்களில்கொள்ளை நடத்திபோலீசாரிடம்பிடிபட்டுள்ளனர் மூன்று இளைஞர்கள்.
விழுப்புரம் மாவட்டம் கிடார், பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரண்டுசெல்போன்டவர்களில்பொருத்தப்பட்டிருந்த சுமார் முப்பதாயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்துசெல்போன்டவர்நிறுவனத்தினர்கிடார்காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் தலைமையிலானபோலீசார்விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அரியலூர் திருக்கை, பகுதியில் மூன்று இளைஞர்கள் சந்தேகப்படும் வகையில் சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்களைஅழைத்துபோலீசார் விசாரித்தனர். மூவரும் முன்னுக்குப் பின்முரணாகப்பேசியதுகாவல்துறையினருக்குச்சந்தேகம் வலுத்தது.
அவர்களைக்காவல் நிலையம் அழைத்துச் சென்று முறைப்படி விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுஜாவித்அன்சாரி, 20 வயதுராகீத்என்பதும், இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பதும் தெரியவந்தது. மூன்றாவது நபர் விழுப்புரம் வி.மருதூர்பகுதியைச்சேர்ந்த 30 வயதுசுசில்குமார் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் மூவரும் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றுகம்ப்யூட்டர்மற்றும் அது சம்பந்தமானஉதிரிப்பாகங்கள்விற்பனை செய்து வருகிறார்கள். அதோடுகம்ப்யூட்டர்பழுதுகளையும் சரி செய்து வருகிறார்கள். இவர்கள் மூவரதுசெல்போன்என்னைக்கொண்டு ஆய்வு செய்ததில் மூவரும்கிடார்பகுதிசெல்போன்டவர்களின்உதிரிப்பாகங்களைக்களவாடிச்சென்றது தெரியவந்தது. அதையடுத்து மூவர் மீதும்வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தின் மூலம் சிறையில் அடைத்துள்ளனர்.செல்போன்டவரைவிட்டு வைக்காமல் தங்கள் கைவரிசைக் காட்டிய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)