Skip to main content

கஜா புயல் மீட்புக்கு சென்ற இளைஞர்களே நீலகிரி பக்கம் கொஞ்சம் வாருங்களே.. எதிர்பார்ப்பில் பாதிக்கப்பட்ட மக்கள்

Published on 11/08/2019 | Edited on 11/08/2019

நீலகிரி மாவட்டம் ஊட்டி, மேட்டுப்பாளையம், சூண்டி, உள்ளிட்ட அத்தனை பகுதிகளும் வரலாறு காணாத மழையின் பாதிப்பில் சிக்கி மலைகள் சரிந்து உயிர்கள், வீடுகள், உடமைகள் அத்தனையும் இழந்து பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளனர். தங்கள் வீடுகள் உருண்டு பள்ளம் நோக்கி செல்வதை செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்த மக்கள் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. 
 

 Young people who went to the Gaza Storm Rescue ..


எந்த ஒரு உடமையும் இன்றி தன்னந்தனியாக நிர்கதியாக நிற்கும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட தன்னார்வலர்கள் செல்ல வேண்டும். உணவு கிடைக்கிறது ஆனால் குளிரை போக்க கம்பளி இல்லை.சில்லிட்ட தரையில் விரிக்க பாய் இல்லை. வயிற்றுவலியால் அவதிப்படும் இளம் பெண்களுக்கு நாப்கின் இல்லை. அவசர உதவிக்கு மாத்திரைகள் இல்லை அத்தனையும் கிடைத்தால் அவர்களின் மனநிலையிலிருந்து சற்று வெளியே கொண்டு வரலாம்.

இந்த நிலையில் ஒவேலி மற்றும் அப்பகுதி களத்திலிருந்து பேசும் இளைஞர்கள்..

 

 Young people who went to the Gaza Storm Rescue ..

 

8 மாதங்களுக்கு முன்பு கஜா புயல் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்டது. அந்த நேரத்தில் அரசாங்கத்தை எதிர்பார்க்காத தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் களமிறங்கினார்கள். தங்களால் இயன்ற நிவாரண உதவிகளை செய்த இளைஞர்கள் கிராமங்களில் தங்கி மீட்புப் பணியில் இறங்கினார்கள் சில நாட்களில் கோடிக்கணக்கான மரங்களை ஓரங்கட்டினார்கள்.

 

 Young people who went to the Gaza Storm Rescue ..

 

இப்படியான இளைஞர்கள் தான் இப்போது நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வேண்டும். வாருங்கள் இளைஞர்களே உங்கள் உதவிக்காக காத்திருக்கிறோம் என்றனர். இந்த நிலையில் நிவாரண உதவிகள் எங்கே தேவை என்பதை வழிகாட்ட சில இளைஞர்கள் தங்கள் செல்போன் எண்களையும் கொடுத்துள்ளனர். அவர்களை தொடர்பு கொண்டால் வழியும் காட்டுவார்கள்.. அவர்களின் எண்கள்.. 9003990629, 9527119747
புறப்படுங்கள் கஜாவில் மீட்ட இளைஞர்களே..

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Next Story

ராகுல் காந்தி பயணித்த ஹெலிகாப்டரில் சோதனை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Rahul Gandhi's helicopter was tested

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி இன்று (15.04.2024) நீலகிரி மாவட்டம் பந்தலூர் வந்தடைந்தார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர். ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து தேவாலயம் செல்லும் ராகுல் காந்தி அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு செல்லும் வழியில் பந்தலூர் பகுதிக்கு ராகுல் காந்தி வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நீலகிரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக ஹெலிகாப்டர் மூலமாக உதயநிதி ஸ்டாலின் நேற்று (14.04.2024) நீலகிரி வந்திருந்தார். அப்போது அவர் வந்த ஹெலிகாப்டரையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.