Advertisment

''வேலை தேடும் இளைஞர்கள் இதனை நம்பி ஏமாற வேண்டாம்''-வீடியோ வெளியிட்ட தமிழக டிஜிபி

publive-image

அண்மையில் ஆன்லைன் ரம்மி, க்ரிப்டோ கரேன்சி உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்த வேண்டாம், அவை உடமைக்கும் தீங்கு விளைவிப்பதை விட உயிருக்கு தீங்கு விளைவிப்பவை என தொடர்ந்து வீடியோ காட்சிகள் மூலம் விழிப்புணர்வை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கொடுத்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ''வெளிநாடுகளில் வேலை வாங்கி தருகிறோம் என்று சொல்லி அந்த நாடுகளில் இணையவழி குற்றங்களில் ஈடுபடுத்தி, சிரமப்பட்டு, எங்களை காப்பாத்துங்கள் என அரசுக்கு பலர்கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisment

அதன்படி கம்போடியாவிலிருந்து 13 பேரை காப்பாற்றி கூட்டிவந்துள்ளனர். தாய்லாந்திலிருந்து 29 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். படித்ததற்கான வேலை தருகிறோம், டேட்டா என்ட்ரி வேலை தருகிறோம் என கூட்டிக்கொண்டு போய் 4000 டாலர் அதாவது 3 லட்சம் சம்பளம் தருகிறோம் என கூட்டி கொண்டுபோய் ஃபிராட் சைனீஸ் ஆப், லோன் ஆப், க்ரிப்டோ கரேன்சி தொடர்பான ஃபிராட் வேலைகள் அல்லது கல்யாணம் தொடர்பான ஃபிராட் வேலைகளை செய்வதற்கு பயன்படுத்துகிறார்கள்.

Advertisment

உங்கள் வாட்ஸ்அப், உங்கள் மொபைல் போன், மெயில் ஐடி மூலம் உங்களை குற்றச்செயல்களை செய்யவைத்து உங்களை குற்றவாளி ஆக்குவார்கள். நீங்கள் செய்வது தவறு என அறிந்து நீங்கள் அங்கிருந்து போகவேண்டும் என சொன்னால் உங்களை விடமாட்டர்கள். படித்த பட்டதாரிகள் உங்களுக்கு இருக்கும் நாலேட்ஜ்க்கு தான் வேலை கிடைக்கும். நாலேட்ஜ்க்கு மீறியெல்லாம் வெளிநாட்டில் வேலை கிடைக்காது.

அப்படி கொடுத்தால் ஆன்லைன் மோசடி வேலைக்குத்தான் பயன்படுத்துவார்கள் என்பதை புரிந்து கொண்டு, அதுவும் டூரிஸ்ட் விசாவில் போகக்கூடாது. ஜாப் விசா அதுவும் வேலைத்தரக்கூடிய கம்பெனி தொடர்பில் இருந்து நியாமான முறையில் வேலை கிடைத்தால் மட்டும்தான் செல்ல வேண்டும். அதை தவிர்த்து வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றும் முகவர்களிடம் போய் ஏமாறாதீர்கள். வேலை தேடும் இளைஞர்கள் இதுபோன்ற போலித்தனமான வேலைகளை நம்பி செல்ல வேண்டாம்'' என்றார்.

DGPsylendrababu police TNGovernment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe