மதுரையில் குவிந்த இளைஞர்கள்... வைரலாகும் வீடியோ காட்சிகள்!

Young people gathered in Madurai ... Video footage going viral

நாடுமுழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவல் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தில் இருந்த நிலையில், அதன் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் விதித்து உதரவிட்டது. இதனால் இளைஞர்கள் பலரும் வேலைவாய்ப்பை இழந்து பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டது.

இதனையடுத்து தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதை அடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொழிற்சாலைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள எல்காட் எனப்படும் மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவில் அங்குள்ள நிறுவனங்களில் வேலைக்காக ஆள் எடுக்கப்பட்டது. இதற்காக கொளுத்தும் வெயிலில் நீண்ட நெடிய வரிசையில் படித்த பட்டதாரி இளைஞர்கள் காத்திருந்ததைஅவ்வழியாக சென்ற நபர்கள் சிலர் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோவானது தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

IT PARK madurai
இதையும் படியுங்கள்
Subscribe