Skip to main content

ஹிஜாப்பை அகற்றச் சொல்லி மிரட்டும் இளைஞர்கள்! வேலூர் கோட்டையில் பரபரப்பு!

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

Young people Emphasis to remove hijab!

 

வேலூரில் வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய சுற்றுலாத் தலமான வேலூர் கோட்டை அகழியில் உள்ள மதில் சுவர் மீது சுற்றுலாப் பயணிகள் சுற்றி வருவதை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில், வேலூர் கோட்டையில் சிலர் இஸ்லாமியப் பெண்களின் ஹிஜாப்பை அகற்றுமாறு மிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

 

சில தினங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் இருந்து இஸ்லாமியப் பெண்கள், இந்து ஆண்களுடன் மதில் சுவரின் சுற்றுப் பாதையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இஸ்லாமிய பெண்கள் அமர்ந்திருந்ததைக் கண்ட இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் ஹிஜாப் அணிந்து கொண்டு எப்படி நீங்கள் இந்து ஆணுடன் சுற்றலாம் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் ஹிஜாப்பை அகற்ற வற்புறுத்துகின்றனர். இஸ்லாமிய சமூகத்தில் பிறந்த ஒரு பெண் ஹிஜாப்பை போட்டுக்கொண்டு எவ்வாறு இன்னொரு ஆளுடன் சுத்தலாம் என உருது மொழியில் கேட்கின்றனர். அது மட்டும் இல்லாமல் அடாவடித்தனமாக வீடியோ எடுக்க வேண்டாம் என பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக்கொண்ட பிறகும் வீடியோ எடுத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளனர்.

 

இந்த வீடியோவில் உள்ள ஒரு இஸ்லாமிய பெண், ஹிஜாப்பை கழட்ட வற்புறுத்திய நபாரிடம் "நீ யார் ஹிஜாப்பை அகற்ற சொல்வதற்கு" என்று திருப்பி கேள்வி கேட்கிறார். ஜமாத்துக்கு போலாமா? போலீஸ் ஸ்டேஷனுக்கு போலாமா? என வீடியோ எடுத்த நபர் அந்த பெண்ணை மிரட்டுகிறார். என் விருப்பம் நான் ஹிஜாப்பை அணிவதும் அணியாமல் போவதும் என அந்தப் பெண் திரும்ப கூறுகிறார். உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் நீ அணிந்திருக்கும் ஹிஜாப்புக்கும் எனக்கும் சம்பந்தம் உள்ளது. அதை நான் தான் தட்டி கேட்பேன் என மிரட்டலாக அந்த நபர் கூறுகிறார். 

 

இஸ்லாமிய பெண்கள் இந்து ஆண்களுடன் வருபவர்களை குறி வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில்  பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஹிஜாப் அணியமாட்டோம் என ஈரானிலும், ஹிஜாப் எங்கள் உரிமை என இந்தியாவிலும் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் சுற்றுலாத் தலமான வேலூர் கோட்டையில் தற்போது ஹிஜாப் தொடர்பான இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எடுத்த நபர் குறித்து வேலூர் வடக்கு காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தற்போது ஏழு பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.   

 

இதுபோன்ற செயல்கள் வேலூர் கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருந்தாலும், ஒருபுறம் பெண்கள் குறித்த பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் சமுதாயத்தில் அமைதியை சீர் கெடுக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. ஏற்கனவே வேலூர் கோட்டையில் நடைபெறும் பல்வேறு குற்றச் செயல்களை தடுக்க அதிகப்படியான காவலர்கள் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீடித்து வரும் நிலையில் இது போன்ற செயல் தொடர்ந்து வருகிறது. ஆகவே வேலூர் கோட்டை பகுதியில் காவல் பாதுகாப்பை அதிகப்படுத்துவதுடன் ரோந்து சென்று இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களை தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர்; ‘நடந்தது என்ன?’ -  காவல்துறை விளக்கம்!

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
Thiruvenkadam incident An explanation has been given by the Chennai Police

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்படார். இது தொடர்பாக 11 பேர் சரணடைந்த நிலையில் 11 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடி காவலில் விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் இந்த வழக்கு தொடர்பான திடுக்கிடும் தகவல்களையும், அதற்கான சதி திட்டம் தீட்டிய இடத்தில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது குறித்தும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரை இன்று (14.07.2024) அதிகாலை புழல் வெஜிடேரியன் நகருக்கு அழைத்துச் சென்று தடயங்கள் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து கண்டறிவதற்காக காவல்துறையினர் சென்றனர். அப்போது அவர்களின் பிடியில் இருந்து ரவுடி திருவேங்கடம் தப்பிச் சென்று, அப்பகுதியில் உள்ள இரும்பு தகடு வேயப்பட்ட சிறு கூரையின் உள்ளே பதுங்கிக் கொண்டு அங்கு மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் காவல்துறையினரை நோக்கி சுட்டுள்ளார்.

Thiruvenkadam incident An explanation has been given by the Chennai Police

அப்போது சரணடையும்படி எச்சரிக்கை விடுத்தும் சரணடையாமல் வெளியே வர மறுத்து தப்பி செல்ல திட்டம் தீட்டியதாக தெரிகிறது. இதனால் வேறு வழியின்றி காவல்துறையினர் ரவுடி திருவேங்கடத்தை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டதில் மார்பிலும், வயிற்றிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் சுருண்டு விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை மீட்டு மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு திருவேங்கடத்தின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த என்கவுண்டர் சம்பவம் தொடர்பாக பெருநகர சென்னை காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52 வயது) கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கே - 1 செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் சென்னை   குன்றத்தூர், பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் திருவேங்கடம் (வயது 33) உட்பட 11 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

Thiruvenkadam incident An explanation has been given by the Chennai Police

இவ்வாறு கைது செய்யப்பட்ட திருவேங்கடம் உட்பட 11 நபர்கள் விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர். அதில் திருவேங்கடம் இந்த கொலை வழக்கு தவிர இரண்டு கொலை வழக்குகள் மற்றும் வழிப்பறி, கொடுங்காய வழக்கு உள்ளிட்ட ஐந்து வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று (14.07.2024) அதிகாலை போலீஸ் காவலில் இருந்த திருவேங்கடத்தை இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற எதிரி தங்கியிருந்த மணலியில் உள்ள வீட்டிற்கு தக்க பாதுகாப்புடன் அரசு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார். அவ்வாறு அழைத்து செல்லும்போது, இயற்கை உபாதைக்காக ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் போலீஸ் வாகனத்தை நிறுத்தினர்.

அப்போது பாதுகாப்பில் இருந்த காவலர்களை தள்ளிவிட்டு திருவேங்கடம் தப்பி ஓடிவிட்டார். உடனடியாக பாதுகாவலாக சென்ற காவலர்கள் அவரை பிடிக்க முயற்சித்தும் பிடிக்க இயலவில்லை. புழல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெஜிடேரியன் வில்லேஜ் என்ற இடத்தில் மறைந்திருந்த திருவேங்கடத்தை பிடிக்க முயற்சித்தபோது  தான் மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி சுட்டுள்ளார். உடனடியாக காவல் ஆய்வாளர் திருவேங்கடத்தை தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதில், காயமடைந்த திருவேங்கடம் உடனடியாக மெரிடியன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக எம் - 3 புழல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை நீதிமன்ற நிதிபதி விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

டிஜிட்டல் பேனரால் ஏற்பட்ட தகராறு; போலீசார் குவிப்பு

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
Dispute caused by Digital Banner; Police build up

டிஜிட்டல் பேனரால் ஏற்பட்ட தகராறில் கோவில் பண்டிகை கலவரக்காடான சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை பொய்யாமணி அம்பேத்கர் நகரில் காளியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோவிலில் கடந்த பன்னிரண்டாம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் குறிப்பிட்ட இடங்களில் வரவேற்பு அளிக்கும் வகையில் டிஜிட்டல் பேனர்கள் வைத்திருந்தனர். அந்த டிஜிட்டல் பேனரை மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கிழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது.

இதில் இரண்டு தரப்பு மோதி கொண்ட நிலையில் நான்கு பேர் காயமடைந்து குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சாரார் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் அதிகப்படியான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.