Advertisment

இதுக்கெல்லாம் ஒரு சண்டையா? - மாறி மாறி தாக்கிகொண்ட இளைஞர்கள்!

Young people beaten in turn at gudiyattam

Advertisment

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் கபிலேஷ் (வயது18) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு கபிலேஷ் பணியில் இருந்த போது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக இரண்டு பேர் வந்துள்ளனர்.

பெட்ரோல் நிரப்பும்போது கடைசியாக பெட்ரோல் கன்னைஇருசக்கர வாகனத்தில் இருந்து எடுக்கும் போது சிறிது பெட்ரோல் இரு சக்கர வாகனத்தின் உரிமையாளர் மீது சிந்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஊழியர் கபிலேசுக்கும் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் கபிலேஷை கன்னத்தில் தாக்கியுள்ளார். பின்னர் இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர்.

இதில் கபிலேஷ் சிசிடிவி காட்சிகளுடன் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் கொடுத்தப் புகாரின் பேரில் கொண்ட சமுத்திரம் மற்றும் ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன், தமிழ்வாணன், லோகேஷ், இரணியன், தினேஷ் பாபு ஆகிய ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

பெட்ரோல் பங்க்ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் மாறி மாறி அடித்துக் கொண்ட சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe