/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2128.jpg)
திருச்சி மாவட்டம், மணப்பாறை மோர்க்களத்து பகுதியைச் சேர்ந்தவர் யாகூப்(25). இவருக்கும் அண்ணாநகர் அப்பகுதியைச் சேர்ந்த நான்கு வாலிபர்களுக்கும் ஒரு திரையரங்கில் படம் பார்க்கும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் முன்விரோதம் காரணமாக அந்த நான்கு பேரும் மோர்க்களத்து பகுதியில் உள்ள யாகூப் வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை கையில் கொண்டு வந்த பட்டாக்கத்தியால் அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் அப்பகுதியில் பட்டா கத்திகளுடன் 4 பேரும் வலம் வந்ததால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மணப்பாறை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலர்கள் கையில் பட்டா கத்தியுடன் சுற்றித்திரிந்த ஹாக்கி கார்த்தி (28), பெரியசாமி(27), அருண்பாண்டியன்(31), சூரியா(21) ஆகிய 4 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)