ADVERTISEMENT

400 கி.மீ நடந்து வந்த இளைஞர்கள்!!!  அதிகாரிகள் முயற்சியால் வேன் மூலம் பயணம்!

07:11 PM May 19, 2020 | kalaimohan



கரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, பெட்டிக்கடை முதல் பெரிய நிறுவனங்கள் வரை எதுவும் செயல்படக்கூடாது என அறிவித்திருந்தது மத்திய – மாநில அரசுகள். கடந்த 45 நாட்களை மக்கள் பசியும், பட்டினியுமாக கடந்த நிலையில், தற்போது மே 18ந்தேதி முதல் நான்காம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


மூன்றாம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, வேலையில்லா நிலை, பசியாலும், உயிர் பயத்தாலும் பிற மாநிலங்களில் வாழும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது ஊருக்கு செல்ல முடிவு செய்து நடக்க தொடங்கினர். ஆயிரம் கிலோ மீட்டர், இரண்டாயிரம் கிலோ மீட்டர் தூரம் உள்ள பகுதிகளுக்கு போக்குவரத்து இல்லாத நிலையில் நடக்க துவங்கினர்.

இதனால் விபத்துகள் நடந்து இந்தியாவின் கோரத்தை காட்டின. இவை எதையும் மத்தியில் ஆளும் பாஜக அரசுகளும், மாநில அரசுகளும் கண்டுக்கொள்ளவில்லை. இந்தியாவின் எதிர்கட்சிகள் மக்களின் துயரத்தை கண்டும், பிற மாநில ஏழை தொழிலாளர்களின் அவலத்தை கண்டு குரல் கொடுக்க துவங்கியபின் மாநில அரசுகள் அவர்கள் தங்களது சொந்த செலவில் பிற மாநில தொழிலாளர்களை அவர்களது ஊருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றது.

மாநில அரசுகள் நிதியில்லை என தயங்கின. சில மாநில அரசுகள் பிற மாநில தொழிலாளர்களை அனுப்பிவைக்க சரியான திட்டமிடல் செய்யாததால், பசியோடு தேசிய நெடுஞ்சாலைகளில் சுட்டெரிக்கும் வெயிலில் நடக்க துவங்கினர்.


இதுப்பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவுங்க நடக்கறது உங்களுக்கு பாரமா இருந்தால் நீங்க அவுங்க சுமையை சுமந்துக்கிட்டு நீங்களும் போங்க என பதிலளித்தார். இது நாடு முழுவதும் இது கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றிய வடமாநிலமான ஒடிஷாசை சேர்ந்தவர்கள், தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தனர். அவர்களின் சென்னையில் உள்ள அவர்களது ஊரை சேர்ந்தவர்கள் இங்கே வந்துவிடுங்கள் இங்கிருந்து நம் மாநிலத்துக்கு போய்விடலாம் எனச்சொன்னதன் அடிப்படையில் திருப்பூரில் இருந்த சென்னைக்கு 7 இளைஞர் நடந்து வந்துள்ளனர். 400 கிலோ மீட்டர் நடந்து மே 18ந்தேதி இரவு திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வந்துள்ளனர். ஆரணி நகரை தாண்டி சேவூரை கடக்கும்போது, அந்த கிராம நிர்வாக அலுவலர் சரவணன், அவர்களிடம் விசாரித்து இதுப்பற்றி ஆரணி தாசில்தார் தியாகராஜனிடம் கூறியுள்ளார்.


அவர்கள் அதற்கு மேல் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றவர், இதுப்பற்றி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமியின் கவனத்துக்கு இந்த தகவலை கொண்டு சென்றுள்ளார். பின்னர் அவர்களது போக்குவரத்துக்கு யாராவது உதவினால் வாகனம் ஏற்பாடு செய்து, ஆந்திரா மாநிலம் சித்தூர்க்கு அனுப்பி வையுங்கள், அங்கிருந்து அவர்கள் வேறு வாகனம் மூலம் செல்லட்டும் எனக்கூறியதாக கூறப்படுகிறது. அதன்படி ஆரணியில் செயல்படும் அறம் செய்வோம் இயக்கத்தின் சுதாகரிடம் அதிகாரிகள் கேட்டுள்ளனர். அவர் ஒரு வேன் ஏற்பாடு செய்து ஒரு சீட்டுக்கு ஒருவர் என அமரவைத்து 7 பேரையும் சித்தூரில் விட ஏற்பாடு செய்துள்ளார். அதற்கு முன்னதாக அவர்களுக்கு தேவையான உணவு தந்து உண்ண வைத்துள்ளனர்.

அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பாராட்டுதலை பெற்றுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT