young man who wrongly flirted with his girlfriend along with his friends

சென்னை அருகே வசித்து வந்த இளம்பெண்(22) ஒருவர் கடந்த 22 ஆம் தேதி காணாமல் போயுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர்கள் பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இரண்டு நாள் கழித்து 24 ஆம் தேதி அந்த பெண் பரங்கிமலை பேருந்து நிலையத்தில் நின்றுள்ளார்.

Advertisment

தகவலின் பேரில் அங்குச் சென்ற பெண்ணின் பெற்றோர் மகளை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். வீட்டில் வைத்துப் பெற்றோர் அந்த பெண்ணிடம் நடந்தது குறித்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. பட்ரோட்டில் உள்ள ஒரு உணவகத்தில் வேலைப்பார்த்து வரும் தெனாலி என்பவர் என்னைக் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி கோயம்பேட்டில் உள்ள ஒரு அறையில் தங்க வைத்து என்னை வன்கொடுமை செய்தார். பிறகு கும்பகோணம் அழைத்துச் சென்றார். அங்கு அவரது நண்பர்கள் சிலரும் என்னை வன்கொடுமை செய்தனர் எனக் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.

Advertisment

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்துறையில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தப்பட்டது. இதனிடையே பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது உறுதியானது. இதனைத் தொடர்ந்து தெனாலியை கைது செய்து விசாரணை நடத்திய போலீசார், அவரது நண்பர்களான சங்கர்(24), ராஜேந்திரன்(45), சரண்(31), விஜய்(26) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின்பு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த நான்கு பேரும் தனித்தனியே அந்த பெண்ணை வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து கைதான 5 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisment