style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கோவையில் கொலைமுயற்சி வழக்கில் சிறை சென்று ஜாமினில் வந்தரைமர்ம நபர்கள்நீதிமன்ற வளாகத்திலேயேகத்தியால் தாக்கியசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சுங்கம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (22). இவர் கொலைமுயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் கோவை நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட்டு வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல கையெழுத்து போட வந்த இளைஞரை மர்மநபர்கள் 3 பேர் கத்தியால் குத்தி தப்பி ஓடினர்.
இதில் இளைஞருக்கு தலையிலும் முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து படுகாயம் அடைந்த சூர்யா வாக்கு மூலத்தில் தீபக், சச்சின், பெலிக்ஸ் ஆகிய 3 பேரும் சேர்ந்து கத்தியால் குத்தியதாக வாக்கு மூலம் அளித்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.